search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் வடமாநில தொழிலாளி கொலையில் நண்பர்கள் கைது
    X

    திருப்பூரில் வடமாநில தொழிலாளி கொலையில் நண்பர்கள் கைது

    திருப்பூரில் வட மாநில தொழிலாளி கொலையில் அவரது நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருப்பூர்:

    மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் முகம்மது ரோணி (34). இவர் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே அறை எடுத்து தங்கி வஞ்சிப்பாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.இவருடன் மேற்கு வங்காளத்தை சேர்ந்த முகம்மது சைபுல் (28), முகம்மது யாசின் (23) ஆகியோரும் தங்கி இருந்தனர். அவர்களும் முகம்மது ரோணி வேலை பார்த்த பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

    பின்னர் முகம்மது ரோணி வேறு கம்பெனிக்கு வேலைக்கு சென்று விட்டார். தான் தங்கும் இடத்தையும் மாற்றி விட்டார்.

    இந்த நிலையில் கணியாம் பூண்டி பிரிவில் முகம்மது ரோணி மார்பில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். அவர் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து அனுப்பர் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    சந்தேகத்தின் பேரில் முகம்மது ரோணி நண்பர்கள் முகம்மது சைபுல், முகம்மது யாசின் ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தார். ஆனால் அவர்கள் இருவரும் தலைமறைவானது தெரிய வந்தது.

    அவர்களை தேடி வந்தார். இந்த நிலையில் அவர்கள் போலீஸ் பிடியில் சிக்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். கைதான முகம்மது சைபுல், முகம்மது யாசின் ஆயோர் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது-

    நாங்களும் முகம்மது ரோணியும் மேற்கு வங்காளத்தில் இருந்து ஒரே சமயத்தில் தான் வேலைக்கு வந்தோம். ஒரே அறையில் தங்கி இருந்து ஒரே பனியன் கம்பெனியில் வேலை பார்த்தோம்.

    அதன் பிறகு முகம்மது ரோணி வேறு பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று விட்டார். வேறு இடத்திலும் அறை எடுத்து தங்கினார்.

    இதனால் எங்களுக்குள் மன ஸ்தாபம் ஏற்பட்டது. சம்பவத்தன்று கணியாம் பூண்டி பிரிவில் முகம்மது ரோணியை சந்தித்தோம். அப்போது அவரிடம் நாம் அனைவரும் ஒன்றாக தான் வேலைக்கு வந்தோம். ஏன் பிரிந்து சென்றாய்? என கேட்டோம்.மேலும் முகம்மது ரோணி எங்க ளிடம் பணம் வாங்கி இருந்தார். அதனை திருப்பி கொடுக்கும் படியும் கூறினோம். அவர் கொடுக்க மறுத்தார்.

    இதனால் எங்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நாங்கள் பனியன் கம்பெனியில் பயன்படுத்தும் கூர்மையான ஆயுதத்தால் முகம்மது ரோணியின் நெஞ்சில் குத்தினோம். இதில் அவர் இறந்து விட்டார். சிறிது நேரம் அங்கு நின்றோம்.

    கொலையை யாரும் பார்க்காததால் அங்கிருந்து தப்பி சென்றோம். போலீசார் எங்களை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். #Tamilnews

    Next Story
    ×