search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செங்கோட்டில் இலவச காது பரிசோதனை முகாம்
    X

    திருச்செங்கோட்டில் இலவச காது பரிசோதனை முகாம்

    திருச்செங்கோடு ஹைடெக் ரோட்டரி சங்கம் மற்றும் இ.என்.டி கேர் டாக்டர் சுதாகர் இணைந்து நடத்திய இலவச காது பரிசோதனை முகாம் நாமக்கல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. #medicalcamp

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு ஹைடெக் ரோட்டரி சங்கம் மற்றும் இ.என்.டி கேர் டாக்டர் சுதாகர் இணைந்து நடத்திய இலவச காது பரிசோதனை முகாம் நாமக்கல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ரோட்டரி சங்க தலைவர் பாலமுருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவரும் ரோட்டரி மாவட்ட கவர்னருமான நடேசன் சிறப்புரை வழங்கினார். துணை கவர்னர் ரமேஷ்பாபு முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். #medicalcamp

    Next Story
    ×