search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் எல்ஐசி முகவர்கள் தர்ணா போராட்டம்
    X

    தஞ்சையில் எல்ஐசி முகவர்கள் தர்ணா போராட்டம்

    தஞ்சையில் எல்ஐசி முகவர்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    நாடு தழுவிய எல்.ஐ.சி முகவர்கள் சங்கம் (லிகாய்) சார்பாக தஞ்சை கோட்ட அலுவலகம் முன்பு இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    லிகாய் சங்க கோட்ட தலைவர் பூவலிங்கம் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் வரவேற்று பேசினார். கோட்ட செயலாளர்கள் கருணாநிதி, ராஜமாணிக்கம், திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் ராஜா தொடங்கி வைத்தார். கிழக்கு கோட்ட தலைவர் தங்கமணி, கோட்ட பொருளாளர் சம்பத் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எல்.ஐ.சி முகவர்களுக்கு ரூ.18 ஆயிரம் குறைந்த பட்ச மாத ஊதியம் வழங்க வேண்டும். எல்.ஐ.சி முகவர்களுக்கு உண்மையான பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணிக்கொடை ரூ.10 லட்சம் வழங்கி கணக்கீட்டு முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. #Tamilnews

    Next Story
    ×