search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் பஸ்கள் இயங்காததால் பயணிகள் அவதி
    X

    தனியார் பஸ்கள் இயங்காததால் பயணிகள் அவதி

    மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி இன்று தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தனியார் பஸ் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill

    ஊத்தங்கரை:

    மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி இன்று தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தனியார் பஸ் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். இதனால் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து தருமபுரி, திருவண்ணாமலை, அரூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு பெரும்பாலான தனியார் பஸ்கள் இயங்கவில்லை.

    இதன் காரணமாக இன்று காலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.

    தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக் காரணமாக பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கவில்லை. இன்று காலை போச்சம்பள்ளி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

    தருமபுரியில் இன்று வழக்கம்போல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. 50 சதவீத ஆட்டோக்கள் இயங்கின. அந்த ஆட்டோக்களையும் ஓட்டாமல் நிறுத்தி வைக்குமாறு தொழிற்சங்க நிர்வாகிகள் ஆட்டோ டிரைவர்களை கேட்டுக் கொண்டனர். அவர்களிடம் நோட்டீசும் வழங்கினர்.

    தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாலக்கோடு, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 28 தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் இன்று மூடப்பட்டன.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு வழக்கம் போல தமிழக மற்றும் கர்நாடக அரசு பஸ்கள் இயங்கின.

    கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் இன்று வழக்கம் போல அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கின. லாரிகள் மற்றும் ஆட்டோக்களும் ஓடின.

    Next Story
    ×