search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு அருகே ஆம்னிவேன் தீப்பிடித்து எரிந்தது
    X

    ஈரோடு அருகே ஆம்னிவேன் தீப்பிடித்து எரிந்தது

    ரோட்டில் ஓடிய ஆம்னிவேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த பள்ளிப்பாளையம் அருகே ஆயக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 45). இவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஊரில் வசித்து வருகிறார். மேலும் ரவிச்சந்திரன் ஆயக்காட்டூரில் விசைத்தறி கூடம் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சங்ககிரியில் உள்ள சொந்தக்காரர் ஒருவரது வீட்டிற்கு இன்று செல்ல முடிவு செய்திருந்தார். அதன்படி இன்று காலையில் ரவிச்சந்திரன் தனக்கு சொந்தமான ஆம்னிவேனில் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு சங்ககிரிக்கு புறப்பட்டார். காரில் மொத்தம் 4 பேர் இருந்தனர்.

    ஆம்னிவேனை ரவிச்சந்திரன் ஓட்டினார். காலை 7.30 மணி அளவில் வெப்படை என்ற இடத்தில் ஆம்னிவேன் சென்றபோது, என்ஜீன் பகுதியில் இருந்து திடீரென புகை குபு குபுவென கிளம்பி வெளியே வந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் உடனடியாக ஆம்னி வேனை நிறுத்தினார். இதையடுத்து அனைவரும் காரிலிருந்து படபடவென கீழே இறங்கி சிறிது தூரம் தள்ளிச் சென்று நின்று கொண்டனர்.

    கொஞ்சம் நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு வருவதற்குள் ஆம்னிவேன் முற்றிலும் எரிந்து எலும்புக் கூடாக மாறியது.

    ரோட்டில் ஓடியபோது ஆம்னிவேன் வெடித்து சிதறி இருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். நல்ல வேளையாக ரவிச்சந்திரன் சுதாரித்துக் கொண்டு ஆம்னி வேனை நிறுத்தியதால் அனைவரும் உயிர் தப்பினர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

    Next Story
    ×