search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னூர் அருகே விளைநிலங்களில் புகுந்த யானை கூட்டம்
    X

    குன்னூர் அருகே விளைநிலங்களில் புகுந்த யானை கூட்டம்

    குன்னூர் அருகே விளைநிலங்களில் புகுந்த யானை கூட்டம் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களையும் சேதப்படுத்தியது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மானார், தூதூர்மட்டம், கோட்டக்கல், தைமலை, உள்ளிட்ட பகுதிகள் அடர்ந்த வனப்பகுதி, தேயிலை தோட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மானார் குடியிருப்பு அருகே ரேசன் கடை, ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உள்ள சத்துணவு அரிசி, பருப்பு, ரேசன் பொருட்களை சூறையாட தொடர்ந்து குட்டியுடன் கூடிய 6 யானைகள் வந்த வன்னம் உள்ளன. இப்பகுதியில் உள்ள யானைகள் வனப்பகுதி வழியாக தூதூர்மட்டம் பகுதிக்கு 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நுழைந்து விளை நிலத்திலுள்ள மேராக்காய் தோட்டங்களை சேதப்படுத்தின.

    மேலும் தூதூர்மட்டம் உயர்நிலைப்பள்ளி அருகே பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களையும் சேதப்படுத்தியது. இதனால் பள்ளியின் அருகே காட்டு யானைகள் தொடர்ந்து முகாமிட்டு வருவதால் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×