search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
    X

    சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவியேற்கவுள்ள இந்திரா பானர்ஜியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. #IndiraBanerjee #EdappadiPalaniswami
    சென்னை:

    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து வருபவர் இந்திரா பானர்ஜி. ஒரிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி வினீர் சரண், உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோருடன் இந்திரா பானர்ஜியையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்ய கொலிஜியம் மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரை செய்தது. 

    கொலிஜியத்தின் பரிந்துரையை அனைத்தையும் மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது.

    இதற்கிடையே, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, வரும் 7ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்க உள்ளார். அன்றைய தினம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

    இந்நிலையில், ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜியை முதல்வர் எடப்பாடிபழனிசாமி இன்று சந்தித்தார்.

    அப்போது, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவியேற்கவுள்ள அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

    இந்திரா பானர்ஜி கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #IndiraBanerjee
    #EdappadiPalaniswami
    Next Story
    ×