search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கி கடனை திருப்பி செலுத்தாததால் திமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சொத்துக்கள் முடக்கம்
    X

    வங்கி கடனை திருப்பி செலுத்தாததால் திமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சொத்துக்கள் முடக்கம்

    முன்னாள் தி.மு.க. எம்.பி. கே.சி.பழனிசாமி வங்கிக்கடனை திருப்பி செலுத்தாததால் அவரது ரூ.173 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன. #DMK #KCPalaniswami

    கரூர்:

    கரூர் மாவட்டம் காவாலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கே.சி.பழனிசாமி. தி.மு.க.வை சேர்ந்த இவர் 1986 முதல் 1991 வரை கரூர் நகராட்சி துணைத்தலைவராகவும், 1990, 1997 ஆகிய ஆண்டுகளில் இரு முறை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவராகவும் இருந்துள்ளார்.

    தி.மு.க. சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினராக உள்ளார். இவர், 2004-ல், கரூர், எம்.பி.,யாகவும், 2011-ல் அரவக்குறிச்சி, எம்.எல்.ஏ.வாகவும் தேர்வு செய்யப்பட்டார். கடந்த சட்டசபை தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் தோல்வி அடைந்தார்.

    அதில், பல கோடி ரூபாய் செலவு மற்றும் தொழில் நஷ்டம் காரணமாக, அவர் மிகவும் சிரமப்படுவதாக, தி.மு.க.வினர் கூறி வந்தனர்.

    கரூர் மாவட்டம் மாயனூரில் பாலித்தீன் சிமெண்டு பைகள் தயாரிக்கும் பேக் கேஜிங் நிறுவனம், புதுச்சேரி மாநிலம் திருவண்டார் கோவில் பகுதியில் காகித ஆலை நடத்தி வருகிறார். இதனை அவரது மனைவி அன்னம்மாள், மகன் சிவராமன், மகள் கலையரசி ஆகியோர் இணைந்து கவனித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், அவரது சொத்துகளை கையகப்படுத துவதாக, ஸ்டேட் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. கே.சி.பழனிசாமி மற்றும் அவரது உறவினர்களின் சொத்துகளை அடமானம் வைத்து மாயனூர், புதுச்சேரி நிறுவனங்களில் பெயரில் ரூ.173 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 571 கடனாக பெறப்பட்டுள்ளது.

    கடன் தொகை திருப்பி செலுத்துமாறு வங்கி சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் 60 நாட்களுக்குள் கடனை திருப்பி செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் குறித்த தேதிக்குள் கடனை திருப்பி செலுத்தாததால் கனரா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, ஐ.டி. பி.ஐ. உள்ளிட்ட வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் கடன் தாரர் அடமானம் வைத்து உத்தரவாதம் அளித்த சொத்துகள் முடக்கப்பட்டு கையகப்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. #DMK #KCPalaniswami

    Next Story
    ×