search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு எஸ்.பி. அலுவலக கேன்டீனில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை
    X

    ஈரோடு எஸ்.பி. அலுவலக கேன்டீனில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

    ஈரோடு எஸ்.பி. அலுவலக கேன்டீனில் இன்று முதல் கேரிபேக் உள்பட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை கடைகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

    கேரி பேக் உள்பட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பையை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே பல மாவட்டங்களில் அந்தந்த கலெக்டர்கள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளனர்.

    சில மாநகராட்சிகளிலும் இந்தநடைமுறை அமலுக்கு வந்திருக்கிறது. இதற்கு முன்னோடியாக ஈரோடு எஸ்.பி. அலுவலக கேன்டீனில் இன்று முதல் கேரிபேக் உள்பட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது.

    இதற்கு மாற்றாக துணிப் பைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் காவலர் நல கேன்டீன் இயங்கி வருகிறது. இந்த கேன்டீனுக்கு போலீசார் மட்டுமல்லாமல் பொதுமக்களும் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். டீ, காபி, ஸ்னாக்ஸ் மட்டுமன்றி மதிய உணவும் பொட்டலங்களாக விற்பனை செய்யப்படுகிறது இங்கு உணவுப் பொருட்களை எடுத்து செல்ல கேரிபேக் பயன்படுத்துவது இன்று முதல் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

    கேரி பேக் உள்பட பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைகிறது. எனவே அதை பயன்பாட்டில் இருந்து தவிர்க்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தி இருந்தார்.

    அதன் பேரில் இன்று (சனிக்கிழமை) முதல் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பயன்படுத்துவதில்லை. மதிய உணவு வாழை இலை மூலமாக மடித்து தருகிறோம். கேரிபேக்குக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். சிறிய பை ஒரு ரூபாய் பெரிய பை இரண்டு ரூபாய் என்று செலவாகிறது. இருந்தாலும் விலை ஏதும் இல்லாமல் கேரிபேக் அதற்கு பதிலாக இலவசமாகவே துணிப்பையை சேவை அடிப்படையில் பயன்படுத்தி வருகிறோம்.பொதுமக்களும் நல்ல வரவேற்பு தந்துள்ளார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    எஸ் பி ஆபீஸ் கேன்டீனில் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கப்பட்டிருப்பது பொது மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை முன் மாதிரியாகக் கொண்டு மற்ற உணவகங்களிலும் வர்த்தக நிறுவனங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மக்கும் தன்மையுடைய துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×