search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னம் அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்
    X

    குன்னம் அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்

    குன்னம் அருகே உள்ள வேப்பூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் குன்னம் சட்டமன்ற பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் குன்னம் சட்டமன்ற பொறுப்பாளர்கள்ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு குன்னம் சட்டமன்ற அமைப்பாளர் முத்தமிழ்ச் செல்வன் தலைமை தாங்கினார்.

    வேப்பூர் மண்டல தலைவர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார். பெரம்பலூர் மாவட்ட தலைவர்சாமி இளங் கோவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிதம்பரம் பாராளுமன்றதொகுதி பொறுப்பாளர் அருள் சிதம்பரம், பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் சரவணன், திருச்சி கோட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் பேசினார்கள்.

     கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் ராஜா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நெசவாளர் அணி மாநில தலைவர் பாலமுருகன்,  மாநில செயற்குழு உறுப்பினர் தடா பெரியசாமி, அரியலூர் மாவட்ட தலைவர் நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குன்னம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அடைக்கலராஜ் நன்றி கூறினார்.

    முன்னதாக மாநில துணைத் தலைவர் எம்.என் ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்திலுள்ள பெரிய வெற்றிடத்தை எப்படி நிரப்புவது, அதை எப்படி பூர்த்தி  செய்வது என்றுஅகில இந்திய தலைவர் அமித்ஷா சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுத்துக் கூறி உள்ளனர். அதன்படி தமிழகத்தில்சிறு சிறு  குழுக்களாக அமைத்து 66 ஆயிரம் பூத் கமிட்டி அமைத்துள்ளோம். தற்போது அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பூத் கமிட்டி மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆய்வு செய்து வருகிறோம்.

    வருகின்ற தேர்தலில் தமிழகத்திற்கு பாரதிய ஜனதா கட்சி பாதுகாப்பு அரணாக அமையும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அமைத்து போட்டியிடும். கூட்டணியில் எந்த கட்சி வேண்டுமானாலும் இணையலாம். ரஜினி, கமல் சரியான நேரத்தில் தமிழகத்தில் காலூன்றி உள்ளனர்.

    மேலும் ஒதியம் கிராமத்தில் நிறுத்தப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியை மீண்டும் கொண்டு வர வேண்டும். வேப்பூர் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளின்வசதிக்காக குறிப்பிட்ட நேரத்தில் பஸ்களை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×