search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆடிக்கிருத்திகையொட்டி காய்கறி - பூக்கள் விலை உயர்வு
    X

    ஆடிக்கிருத்திகையொட்டி காய்கறி - பூக்கள் விலை உயர்வு

    ஆடிக்கிருத்திகையொட்டி வேலூர் மார்க்கெட்டில் காய்கறி, பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    ஆடிவெள்ளி, ஆடிக்கிருத்திகையொட்டி கோவில்களில் திருவிழாக்கள் நடக்கின்றது. வேலூர் மாவட்டம் முழுவதும் அம்மன் கோவில்கள், முருகர்கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    இதையொட்டி பொதுமக்கள் சைவ பொருட்கள் சமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை களைகட்டியுள்ளது. ஆந்திரா, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து அதிகளவில் காய்கறிவரத்து உள்ளது. ஆனாலும் தேவை அதிகரிப்பால் வேலூர் மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளது.

    வரத்து மிகவும் அதிகரிப்பால் தக்காளி மட்டும் கிலோ ரூ.8 முதல் 10 வரை விற்பனை செய்யபடுகிறது. வேலூர் மார்க்கெட்டில் காய்கறி விலை 1 கிலோ விவரம் வருமாறு:

    தக்காளி-ரூ.10, கத்தரிக்காய்-ரூ.50, கேரட்- ரூ.40, பீன்ஸ்-ரூ50, அவரைக்காய்-ரூ.50, முள்ளங்கி-ரூ.15, வெள்ளரிக்காய்-ரூ.25, உருளைக்கிழங்கு-ரூ.20, முருங்கை-ரூ.30, சின்னவெங்காயம்-ரூ.40, பெரியவெங்காயம்-ரூ.20, பீர்க்கங்காய்-ரூ.40, புடலங்காய்-ரூ.20 க்கு விற்பனை செய்யபட்டது.

    ஆடிக்கிருத்திகையொட்டி பூக்கள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மல்லிகை, முல்லைப்பூ கிலோ ரூ.200க்கும், சம்பங்கி ரூ.200, கனகாம்பரம் ரூ.30, கேந்தி ரூ.40, ரோஜா ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இன்னும் 3 நாட்கள் விலை உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×