search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார ரெயில்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தால் மாதாந்திர பயணச்சீட்டு ரத்து
    X

    மின்சார ரெயில்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தால் மாதாந்திர பயணச்சீட்டு ரத்து

    மின்சார ரெயில்களில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தால் மாதாந்திர பயணச்சீட்டு ரத்து செய்யப்படும் என ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #ElectricTrain #Ticket #MonthlyPass
    சென்னை:

    கடந்த 24-ந் தேதி காலை மின்சார ரெயிலில் படிக்கட்டு அருகே தொங்கியபடி பயணம் செய்த 5 பேர் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்த சுவரில் மோதி பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து நடந்த பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த 25-ந் தேதி தலைமை ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன் ஆய்வு மேற்கொண்டார்.



    விபத்து குறித்து நேற்று ரெயில்வே சென்னை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் ரெயில் பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் 12 ரெயில் பயணிகள் தங்கள் கருத்துகளையும், விபத்து குறித்தும் தெரிவித்தனர். 22 ரெயில்வே ஊழியர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

    இதுபோன்ற ரெயில் விபத்துகளை தடுப்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் லூயிஸ் அமுதன் கூறியதாவது:-

    ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் நடத்தியுள்ளோம். படியில் தொங்கியபடி பயணிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் மாதாந்திர பயணச்சீட்டு(பாஸ்) பறிமுதல் செய்யப்பட்டு, அதை நிரந்தரமாக ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ElectricTrain #Ticket #MonthlyPass 
    Next Story
    ×