search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் ஜெயிலில் 2-வது கட்டமாக கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை
    X

    வேலூர் ஜெயிலில் 2-வது கட்டமாக கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை

    வேலூர் ஜெயிலில் 2-வது கட்டமாக கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என சுமார் 1000 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மரணிப்பது தொடர்கதையாக உள்ளது.

    கடந்த வாரங்களில் 2 கைதிகள் திடீரென இறந்தனர். இதையடுத்து, ஜெயிலில் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்வதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், கடந்த மாதம் கொலை வழக்கில் கைதான திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த சவுகத் அலி 26-ந் தேதி திடீரென நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார்.

    உடல்நலக்குறைவால் அவதியுற்ற அவரை, சிறை அதிகாரிகள் மீட்டு அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 27-ந் தேதி சிகிச்சை பலனின்றி கைதி சவுகத்அலி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து, 28-ந் தேதி வேலூர் ஆண்கள் ஜெயிலில் 5 பேர் கொண்டு மருத்துவக் குழுவினர், 250 கைதிகளுக்கு கண், காதுகளை பரிசோதித்து முழு உடல் பரிசோதனை செய்து மனநல ஆலோசனை வழங்கினர்.

    இதைத்தொடர்ந்து, 2-வது கட்டமாக ஆண்கள் ஜெயிலில் 200 கைதிகளுக்கு மருத்துவ குழுவினர் இன்று முழு உடல் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். மதியத்திற்கு பிறகு வேலூர் பெண்கள் ஜெயிலில் பெண் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

    Next Story
    ×