search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
    X

    நாமக்கல் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

    நாமக்கல் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க 22-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் பரமத்திவேலூர் சேர்மன் பாலு பாப்பாத்தி திருமண மண்பத்தில் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க 22-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் பரமத்திவேலூர் சேர்மன் பாலு பாப்பாத்தி திருமண மண்பத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பால சுப்பிரமணியம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் தியாகராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    முன்னதாக முன்னாள் தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தின் துணைத்தலைவரும், நாமக்கல் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவருமாகிய அமரர் ஜோதி முத்துசாமியின் படத்தை திறந்து வைத்தார். நாமக்கல் முன்னாள் ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் குழந்தான், ராசிபுரம் செல்லையா ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

    சங்க செயலாளர் கணேசன் ஆண்டறிக்கை வாசித்தார். சங்க பொருளாளர் சுரேஷ்குமார் 2017-2018-ஆம் ஆண்டிற்குரிய தணிக்கை செய்த கணக்குகளை சமர்ப்பித்தார்.

    அதனைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    சாதாரண உணவகங்களுக்கு குறைந்தபட்ச வரி விதிக்கப்பட வேண்டும் என்பது நமது சங்கத்தின் கோரிக்கை. 1.50 கோடி வரை ஆண்டு விற்பனையில் உள்ள சாதாரண உணவகங்கள் மீது 5 சதவீத வரி உள்ளது. நிர்வாக செலவுகள் அதிகமாக இருப்பதால் 5 சதவீதம் என்பதை 1 சதவீத வரியாக மாற்றி சாதாரண உணவங்களுக்கு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மாற்றி அமைக்கும்படி மத்திய அரசிடம் கேட்டுக் கொள்வதாக இந்த கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது.

    சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு சுற்றுச்சூழல் துறை மூலமாக திட்டங்களை அமல்படுத்தும் தமிழக அரசின் முயற்சிகளுக்கு நமது சங்கம் பெரும் ஆதரவு தருவதுடன் வருங்காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து பாரம்பரியமான பயன்படுத்தப்படும் வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டினை ஊக்கு விக்கவும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களை பயன்படுத்தி நமது உறுப்பினர்களின் ஒத்துழைப்போடும், பங்களிப்போடும் வெற்றிகரமாக தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தின் ஆலோசனைப்படி செயல் படுத்தப்படும் என்று ஏகமனதாக முடிவு எடுக்கப்படுகிறது.

    முடிவில் வேலூர் நகர செயலாளர் ரமேஸ் நன்றி கூறினார்.

    Next Story
    ×