search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தொண்டர்கள் கலைந்து செல்லவேண்டும் - ஸ்டாலின் வேண்டுகோள்
    X

    திமுக தொண்டர்கள் கலைந்து செல்லவேண்டும் - ஸ்டாலின் வேண்டுகோள்

    காவேரி மருத்துவமனை முன் திரண்டுள்ள திமுகவினர் கலைந்து செல்லுமாறு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Karunanidhi #CauveryHospital #Stalin
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு தற்காலிகமாக சிறிது பின்னடைவு ஏற்பட்டது. அது மருத்துவர்களின் தீவிர முயற்சியால் உடல் நிலை சீரானது.

    இதற்கிடையே, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து தெரிந்து கொள்வதற்காக காவேரி மருத்துவமனை பகுதியில் மழையையும் பொருட்படுத்தாமல் திமுக தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள்.

    காவல்துறையினர் தொண்டர்களைக் கட்டுப்படுத்தி வருகின்றனர். லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். 

    இந்நிலையில், காவேரி மருத்துவமனை முன் திரண்டுள்ள திமுகவினர் கலைந்து செல்லுமாறு திமுக ஸ்டாலின்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக, ஸ்டாலின் கூறுகையில், கலைஞர் உடல் நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் முயற்சியால் அவரது உடல் நிலை சீரானது.

    எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அமைதி காக்க வேண்டும். எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுக்காமல் கலைந்து செல்ல வேண்டும். பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #Karunanidhi #CauveryHospital #Stalin
    Next Story
    ×