search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக்கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் விஜய லட்சுமி தலைமையில் நடைபெற்றது. #farmers

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக்கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் விஜய லட்சுமி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட திட்ட அலுவலர் லோகேஸ் வரி,கோட்டாட்சியர் சத்தியநாராயணன், மாவட்ட கூடுதல் எஸ்பி. பெரியய்யா, தாசில்தார் முத்து லெட்சுமி, கூட்டுறவு இணை பதிவாளர் பழனிவேல், துணை பதிவாளர் செல்வராஜ், வேளாண் துறை இணை இயக்குனர் உதய குமார், வேளாண்மை அதிகாரி வடிவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், விவசாய சங்க பிரதிநிதி அரியலூர் பிச்சபிள்ளை, செங்கமுத்து, வாரணவாசி ராஜேந்திரன், ஆண்டிமடம் ஜெயசந்திரன், தூத்தூர் தர்மராஜ், திருமானூர் சண்முகசுந்தரம், அம்பேத்கர் வழியன், பாண்டியன், ஏரிமற்றும் ஆற்று பாசன விவசாய சங்க தலைவர் விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்,

    கூட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் 5 இடங்களில் தடுப்பனை கட்ட வேண்டும், புள்ளம் பாடி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும், ஏரி, குளம், வாய்க்கால் பகுதியில் குடிமராமத்து திட்டத்தில் நடை பெற்ற முறைகேடுகளை விசாரிக்க வேண்டும்,ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது,

    இக்கூட்டத்தில் கலெக்டர் விஜய லெட்சுமிபேசும் போது, அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம் இது நாள் வரை 196.98 மி.மீ. மழை பெய்துள்ளது. வேளாண்மை மற்றும் தோட்டக் கலை பயிர்களுக்கு தேவையான 1306 மெ.டன் யூரியா, 856 மெ.டன் டி.ஏ.பி, 637 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 1066 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது. இதுவரை சான்று பெற்ற நெல் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் 15 மெ.டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 5 மெ.டன் என கூடுதலாக 20 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 129 மெ.டன் மற்றும் தனியார் கடைகளில் 30 மெ.டன் ஆக மொத்தம் 159 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×