search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொத்துவரி உயர்வை கண்டித்து கரூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
    X

    சொத்துவரி உயர்வை கண்டித்து கரூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

    தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்பபெற வலியுறுத்தி கரூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கரூர், ஜூலை.28-

    தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்பபெற வலியுறுத்தி தி.மு.க. சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கரூர் தலைமைதபால் அலுவலகம் அருகே ஆர்ப் பாட்டம் நடந்தது. ஆர்ப் பாட்டத்துக்கு மாவட்ட செய லாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசும்போது, சொத்து வரியை 100 சதவிதம் உயர்த்தி இருப்பது மக்களுக்கு பேரிடியாக இருக்கிறது. இது அவர்களது வாழ்வாதாரத்தை சுரண்டும் வகையில் உள்ளது.

    எனவே சொத்துவரிஉயர்வு அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும். கரூரில் ஒருங் கிணைந்த பஸ் நிலையத்தை அமைப்பதில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படாமல் இருப்பது பயணி களிடத்தே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சொத்துவரி உயர்வை கண்டித்து தி.மு.க. வினர் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங் கணைஎழுப் பினர். மாவட்ட துணை செயலாளர் எம்.எஸ்.கருணாநிதி, தாந்தோன்றி ஒன்றிய செயலாளர்எம்.ரகுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப் பாட்டத்தில், தி.மு.க. மாநில சட்ட பிரிவு இணை செயலாளர் வக்கீல் மணிராஜ், நகர செயலாளர்கள் எஸ்.வி. கனகராஜ், கரூர் கணேசன், வக்கீல் சுப்பிரமணியன், துணை செயலாளர் ரமேஷ்பாபு, பொதுக்குழு உறுப்பினர் வி.கே.டி.ராஜ்கண்ணு உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×