search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்திய குட்கா மூட்டைகள் பறிமுதல்
    X

    பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்திய குட்கா மூட்டைகள் பறிமுதல்

    பெங்களூருவில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு காரில் கடத்திய குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #GudkhaSeized
    கோவை:

    கோவை தாமஸ்வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் கோவை வழியாக கேரளாவுக்கு குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கோவை- கேரள எல்லையான வாளையார் சோதனைச்சாவடி அருகே கே.ஜி.சாவடி போலீசார் நேற்று காலை வாகன சோதனை நடத்தினார்கள்.

    அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 10 மூட்டைகளில், தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கார் டிரைவரான எர்ணாகுளத்தை சேர்ந்த விபின் (வயது 30), ரியாஸ் (33) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இவர்கள் பெங்களூருவில் இருந்து குட்கா பாக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி, காரில் பதுக்கி கேரளாவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறி முதல் செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளின் மதிப்பு ரூ.70 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.

    குட்கா கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை

    பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயல லிதாம்பிகையிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். கோவையில் குட்கா கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    Next Story
    ×