search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டிவனத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி - போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
    X

    திண்டிவனத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி - போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

    திண்டிவனத்தில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார். #RoadSafetyAwareness
    திண்டிவனம்:

    திண்டிவனம் உட்கோட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி திண்டிவனத்தில் நடைபெற்றது. இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் சீனிபாபு, கார்த்திகேயன், விஜி, போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ஷியாம்பெனட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்து கொண்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் திண்டிவனம் உட்கோட்ட போலீசார், ஊர்க்காவல்படையினர், போலீஸ் நண்பர்கள் குழு, இருசக்கர வாகனங்கள் பழுது பார்ப்போர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனங்களில் சென்று சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த பேரணியானது திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ரெயில்வே மேம்பாலம், நேரு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது. இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், ரங்கராஜ், மகாலிங்கம், பாண்டியன், நடராஜன், கல்யாணராமன், தட்சிணாமூர்த்தி மற்றும் இருசக்கர பழுது பார்ப்போர் நல சங்க தலைவர் பிரபு, துணை தலைவர் குமார், ஆலோசகர் பாலதண்டாயுதபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×