search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே சுனாமி குடியிருப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து சேதம்
    X

    வேதாரண்யம் அருகே சுனாமி குடியிருப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து சேதம்

    வேதாரண்யம் அருகே சுனாமி குடியிருப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி பகுதியைச் சேர்ந்த மணியன்தீவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனத்தின் மூலம் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.

    2006-ம் ஆண்டு கட்டிக்கொடுக்கப்பட்ட இந்த வீடுகள் தரமான முறையில் கட்டப்படாததால் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தற்போது வாழ்வதற்கு தகுதியற்ற நிலையில் விரிசல் ஏற்பட்டு எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். 

    இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள சோமசுந்தரம் என்பவரது வீட்டின் மேற்கூரை முழுவதும் பெயர்ந்து விழுந்தது. வீட்டின் உள்ளே யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள தொகுப்பு வீடுகளை சீர் செய்ய வேண்டும். மிகவும் பழுதடைந்த வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த மாதம் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்து கல்லூரி மாணவர் பிரகாஷ் என்பவர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×