search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள்: அமைச்சர் காமராஜ் தகவல்
    X

    திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள்: அமைச்சர் காமராஜ் தகவல்

    திருவாரூர் மாவட்டத்தில் ரூ.10½ கோடியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் ஊருக்குடி கிராமத்தில் பதினெட்டாவது வாய்க்கால் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் 11.7 கி.மீ தூரத்திற்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட கணிப்பாய்வு அதிகாரியும், பள்ளிக்கல்வித்துறை இணைச் செயலாளருமான சரவணவேல்ராஜ், மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ் ஆகியோர் உடன் சென்றனர்.

    பின்னர் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசின் நீண்ட சட்டப் போராட்டத்தின் விளைவாக காவிரி தண்ணீர் உறுதி செய்யும் வகையில் காவிரி நீர் முறைபடுத்தும் குழு அமைக்கப்பட்டு முதல் முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதற்கு காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டில் குடிமராமத்து பணிகள், தூர்வாரும் பணிகள் ரூ.10 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் 144 பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைவாக முடிக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளை கண்காணிக்கவும், கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வதை உறுதி செய்வதற்காகவும் கலெக்டரும் வெவ்வேறு துறைகளை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் கணிப்பாய்வு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மேற்பார்வையில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் திருவேட்டை செல்வன், கொரடாச்செரி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×