search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரிகள் ஸ்டிரைக் - கோவை மார்க்கெட்டில் பெரிய வெங்காயம், உருளை விலை உயர்வு
    X

    லாரிகள் ஸ்டிரைக் - கோவை மார்க்கெட்டில் பெரிய வெங்காயம், உருளை விலை உயர்வு

    லாரிகள் ஸ்டிரைக் காரணமாக கோவை மார்க்கெட்டில் பெரிய வெங்காயம், உருளை கிழங்கு ஆகியவை விலை அதிகரித்துள்ளது. #LorryStrike

    கோவை:

    கோவை மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேம் ஆகிய வெளி மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம், உருளை கிழங்கு ஆகியவை விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    1 நாளைக்கு 100 லாரிகளில் சரக்குகள் கொண்டு வரப்படும். லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக வட மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    இதனால் கோவை மார்க்கெட்டில் மொத்த விலையில் பெரிய வெங்காயம் ரூ. 15-ல் இருந்து விலை உயர்ந்து ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல உருளை கிழங்கு ரூ. 20-ல் இருந்து விலை உயர்ந்து ரூ. 25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட் வியாபாரி ராஜேந்திரன் கூறியதாவது:-

    வெளிமாநிலங்களில் இருந்து கோவைக்கு வரும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பெரிய வெங்காயம், உருளை கிழங்கு ஆகியவை விலை அதிகரித்துள்ளது. மேலும் கோவை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விற்பனைக்காக வரும் காய்கறிகளான தக்காளி, சின்ன வெங்காயம், வெண்டக்காய், அவரை, புடலங்காய், பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் சிறிய வாகனங்கள் மூலமாக விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இதனால் இந்த காய்கறிகள் கோவை மக்களின் தேவைக்கு ஏற்ப இருப்பதால் விலை அதிகரிக்கவில்லை.

    ஆனால் வெளி மாநிலங்களான லாரிகள் இல்லாததால் விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். கேரளாவில் இருந்து கோவை மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்க வரும் அனைத்து வியாபாரிகளும் சொந்தமாக லாரி வைத்து இருப்பதால் அந்த மாநிலத்துக்கு செல்ல வேண்டிய காய்கறிகள் வழக்கம் போல கொண்டு செல்லப்படுகின்றனர். மேலும் சில நாட்கள் லாரி ஸ்டிரைக் நீடிக்குமானால் விலை உயர வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×