search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரிகள்  ஸ்டிரைக் - வேலூர் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்தது
    X

    லாரிகள் ஸ்டிரைக் - வேலூர் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்தது

    லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து குறைய ஆரம்பித்துள்ளது. #LorryStrike

    வேலூர்:

    லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து குறைய ஆரம்பித்துள்ளது. வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தால் விரைவில் காய்கறி விலை உயரும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

    நாடு முழுவதும் டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரவேண்டும். நாடு முழுவதும் சுங்க சாவடி கட்டண உயர்வை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    அதன்படி, வேலூர் மாவட்ட லாரி உரிமையாளர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. சரக்கு வாகன போக்குவரத்து சேவை முடங்கியுள்ளது.

    வெளிமாநிலங்களில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வரும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் வரத்தும் குறைய ஆரம்பித்துள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் 98 சதவீதம் லாரிகள் ஓடவில்லை. காட்பாடி அருகேயுள்ள தமிழக ஆந்திர மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடியில் 2 சதவீத வாகனங்கள் மட்டும் கடந்து சென்றுள்ளது.

    அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் ஒரு சில வாகனங்கள் மட்டும் வந்து செல்கின்றன.

    வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் இருந்து 5 மாட்டங்களுக்கு காய்கறி வியாபாரம் நடைபெறும். லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நேதாஜி மார்க்கெட்டுக்கு காய்கறி லாரிகளின் வரத்து குறைய ஆரம்பித்துள்ளது.

    இருப்பில் உள்ள வெங்காயம், பூண்டு, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மட்டுமே சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

    ஆந்திராவில் இருந்து தக்காளி, கர்நாடகாவில் இருந்து காய்கறிகள் மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டு வரத்து வழக்கமாக இருக்கும். சீசன் காரணமாக தற்போது ஆக்ராவில் இருந்து உருளை கிழக்கு வந்து கொண்டிருக்கிறது.

    லாரிகள் வேலை நிறுத்தத்தால் ஏற்கனவே கொண்டு வந்து கொண்டிருந்த லோடுகள் மட்டும் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. புதிதாக சரக்குகள் ஏற்றிய லாரிகள் வரவில்லை. தற்போதைய நிலையில் காய்கறிகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    நாளையில் இருந்து காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்வதால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    இதனால் பொது மக்கள் அசைவத்திற்கு மாறியுள்ளனர். வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்க பொதுமக்கள் இன்று குவிந்தனர். #LorryStrike

    Next Story
    ×