search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திட்டமிட்டு படித்தால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம்: கலெக்டர் அறிவுரை
    X

    திட்டமிட்டு படித்தால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம்: கலெக்டர் அறிவுரை

    விடாமுயற்சியுடன் திட்டமிட்டு படித்தால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம் என்று கலெக்டர் கணேஷ் கூறினார்.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் உள்ள படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பல்வேறு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்லும் வகையில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு  நடைபெற்றது.

    இந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்து, தேர்வர்களுக்கு விலையில்லா பாடக்குறிப்பேடுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த பயிற்சி வகுப்புகள் அலுவலக வேலை நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இந்த பயிற்சி வகுப்புகளில் ஏற்கனவே போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், அனுபவமிக்க பயிற்சியாளர்களை கொண்டு தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைத்து தேர்வர்களுக்கும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

    எனவே இந்த பயிற்சி வகுப்புகளை அனைவரும் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விடாமுயற்சியுடன் திட்டமிட்டு படித்தால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம். இந்த பயிற்சி வகுப்பு மூலம் தேர்வர்கள் முறையாக பயிற்சி பெற்று போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்லலாம். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×