search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8-வழி சாலையை அமைக்க விடமாட்டோம் - சீமான் பேட்டி
    X

    8-வழி சாலையை அமைக்க விடமாட்டோம் - சீமான் பேட்டி

    சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலையை அமைக்க விடமாட்டோம் என்று நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #GreenWayRoad #Seeman

    சேலம்:

    சேலம் ஜெயிலில் இருந்து வெளியே வந்த நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    என்னை கைது செய்து சிறைபடுத்துவதன் மூலமாக மக்களுக்கு ஒரு அச்சுறுத்தலை உருவாக்குகின்றனர். நாங்கள் மக்களை சந்திக்கத்தான் போகிறோம். அரசே கருத்து கேட்கிறது. மாவட்ட கலெக்டரிடம் மக்கள் வரிசை வரிசையாக நின்று கருத்து சொல்கிறார்கள். நாங்களும் அதுபோல பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக்கள் தான் கேட்கிறோம். முதல்-அமைச்சர் 90 சதவீத மக்கள் எங்களுக்கு விரும்பி நிலத்தை தந்துவிட்டார்கள் என்று சொல்கிறார். 90 சதவீத மக்கள் நிலத்தை தந்து விட்ட பிறகு, நாங்கள் மக்களை சந்திக்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்க முடியும்.

    மக்களை நாங்கள் சந்திக்கும்போது அவர்களுடைய குறைகளை கண்ணீருடன் பதிவு செய்திருக்கிறார்கள். இது தான் நடந்திருக்கிறது. அந்த இடத்தில் வைத்து என்னை கைது செய்வதன் மூலம் மக்களுக்கு அச்சுறுத்தலை விடுகிறார்கள். மறைமுக மிரட்டலை விடுகிறார்கள். நேற்று சிறைபிடித்து இன்றைக்கு பிணையில் விடுகிறார்கள் என்றால் இது அவசியமற்ற ஒரு கைது. இந்த சிறைபிடிப்பு அவசியமற்றது என்று கருதியதால் தான் நீதிபதி விடுதலை செய்தார்கள். காரணமற்ற கைது.

    ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையே இவ்வளவு சாலைகள் இல்லை. ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு பயணிக்க ஏற்கனவே 6 வழி கிருஷ்ணகிரியில் இருக்கிறது. 4 வழி சேலத்தில் இருக்கிறது. ரெயில் வண்டி பயணம், விமானம் பயணம் இருக்கிறது. எனவே சேலத்திற்கு ஏன் வேக பயணமாக 8 வழி சாலை போட வேண்டும் என சிந்திக்கிறார்கள். வேகமாக போய் நாங்க என்ன செய்ய போகிறோம்.

    கேள்வி: 8-வழிச்சாலை தொழிற் வளர்ச்சிக்கு அவசியம் என்று சொல்கிறார்கள்?

    பதில்: காரை பற்றி கவலைபடுகிறார்கள். ஏன்? நீர், சோறு பற்றி கவலைப்படவில்லை. 10 ஆண்டுகள் கழித்து கார்களின் எண்ணிக்கை கூடிவிடும் என்று சொல்கிறார்கள்.130 கோடி மக்கள் இருக்கிறார்கள். 10 ஆண்டுகள் கழித்து மக்கள் மக்கள் தொகை கூடிவிடும். அவர்களுக்கான நீர், சோறு?. இதை பற்றி சிந்திக்கமாட்டேங்கிறிங்க.


    தொழிற்சாலையா அரிசி, பருப்பு உற்பத்தி செய்யும்?, காய்கறி விற்கும்?. இது என் நிலத்தில் இருந்து தான் வரணும். நிலத்தை எடுத்துவிட்டு பணத்தை தாறேன் என சொல்கிறீர்கள். பணத்தை வைத்து நான் என்ன செய்வேன். அரிசி, பருப்பு வாங்கி சாப்பிடுவேன். இது எங்கிருந்து வரும். என் நிலத்தில் இருந்து வரும். இதைத்தான் என் நிலம் கொடுக்கிறதே.

    நீங்கள் தொழில் வளர்ச்சி என்று எதை சொல்கிறீர்கள்?. தனியார் நிறுவனங்கள் கார் தயாரிக்கிறது, மொபைல் தயாரிக்கிறது. இதைத்தான் தொழில் வளர்ச்சி என்று சொல்கிறீர்களா?, ஏன் நீங்கள் பட்டுப்பூச்சி, வளர்ச்சி, நெசவு வளர்ச்சி, வேளாண்மை செய்தல், ஆடு, மாடு, கோழி வளர்த்தல், தச்சு செய்வது, பாணை செய்வது இதெல்லாம் உங்களுக்கு தொழில் வளர்ச்சி என்று தெரியவில்லையா. விரைவு பயணம் அல்ல. விரைவு அழிவு இது.

    கே: 8-வழிசாலை போட்டு தீருவோம் என்ற முயற்சி அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறதே?

    ப: அரசு முயற்சி செய்யும். ஆனால், ஒருபோதும் இந்த சாலை போடபோறதில்லை. சாலை போடவும் நாங்கள் விடப்போறதில்லை. நீங்கள் கல்லை வேண்டும் என்றால் நடலாம். நிரந்தரமாக 25 வருடம் இவர்களே ஆட்சியில் இருக்க போறதா நினைக்கிறாங்க. இதெல்லாம் கிடையாது.

    அரசு பஸ்சிக்குள்ளே நம்ம மக்கள் குடையை பிடித்து பயணிக்கிறார்கள். ஏனென்றால் மேற்கூரை ஓழுகிறது. ஓட்டுநருக்கு சரியான இருக்கை இல்லை.

    செய்யாத்துரை ஒப்பந்ததாரர் ஆட்டுத்தோல் விற்று கொண்டிருந்தவர். எங்கள் ராமநாதபுரம் மாவட்டத்துக்காரர். ஒரே இடத்தில் காருக்குள் 36 கோடி பணம், கிலோ கணக்கில் தங்கம் பதுக்கி வைத்திருக்கிறார்.

    ஒரே இடத்தில் இவ்வளவு பணம் இருக்கிறது என்றால் பல இடங்களில் எவ்வளவு பணம் இருக்கும்.

    கே: உங்களுடைய அடுத்தக்கட்ட போராட்டம் வடிவம் எப்படி இருக்கும்?

    ப: போராட்டம் நடத்த எங்ககிட்ட அனுமதி கேட்டு போராட்டம் நடத்த வேண்டும் என சொல்கிறார்கள். அனுமதி கேட்டால் கொடுப்பார்களா?

    கே. தூத்துக்குடியில் நீங்கள் ஏன் நுழையவில்லை?

    ப: தூத்துக்குடியில் என்னை இதுவரை நுழையவே விடவில்லை. மதுரையில் தங்கியிருந்து கையெழுத்து போடுங்கள், அதுபோல் சேலத்தில் தங்கியிருந்து கையெழுத்து போடுங்கள் என்று சொல்கிறார்கள். எனது அப்பா இறந்தால் கூட போக முடியாது. இவ்வளவு அடக்குமுறை எதுக்கு.

    மறுபடியும் நான் காவல் துறையிடம் மக்களை சந்திக்க அனுமதி கொடுங்கள் என்று கேட்பேன். மறுத்தால் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மறுபடியும் மக்களை சந்திப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்

    Next Story
    ×