search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தொலைபேசி சேவையை அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல்
    X

    நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தொலைபேசி சேவையை அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல்

    இந்தியாவில் முதல்முறையாக அப்ளிகேசன் மூலம் இயங்கும் தொலைபேசி சேவையை பி.எஸ்.என்.எல் அறிமுகம் செய்துள்ளது.
    சென்னை :

    பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிறுவனத்தின் (தமிழ்நாடு) தலைமை பொதுமேலாளர் ஆர்.மார்ஷல் அந்தோனி லியோ சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    இந்தியாவில் முதல்முறையாக அதிநவீன என்.ஜி.என் எனப்படும் அடுத்த தலைமுறை நெட்வொர்க் மூலம் இயங்கும் இணையதள தொலைபேசி சேவையை பி.எஸ்.என்.எல் அறிமுகம் செய்துள்ளது.

    இதற்காக ‘விங்ஸ்’ என்ற பெயரில் அப்ளிகேசன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேசனை செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் பதிவிறக்கம் செய்து, இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனத்தின் செல்போன் மற்றும் தொலைபேசி எண்களில் இருந்து அழைப்புகளை இலவசமாக ஏற்கவும், பேசவும் முடிவும்.

    இந்திய புதிய சேவை வருகிற 25-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த புதிய சேவையை பெறுவதற்கு ஓராண்டு கட்டணமாக ரூ.1,099 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், விங்ஸ் ஆப் மூலம் குறுந்தகவல், படங்கள், வீடியோ போன்றவற்றை அனுப்பவும், பகிரவும் முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×