search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓமலூர் அருகே டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
    X

    ஓமலூர் அருகே டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

    ஓமலூர் அருகே எம்.செட்டியப்பட்டி ஏரிக்கு செல்லும் கழிவு நீர் கால்வாய் அடைக்கப்பட்டதால் மழைநீர் தேங்கி கொசுக்கல் உற்பத்தி டெங்கு பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்.செட்டியப்பட்டியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர், மற்றும் மழை நீர் கழிவு நீர் வாய்க்கால் வழியாக எம்.செட்டியப்பட்டி ஏரிக்கு சென்று வருகிறது.

    இந்த நிலையில் எம்.செட்டியப்பட்டி பகுதியில் இருந்து ஏரிக்கு செல்லும் கழிவு நீர் கால்வாயை மண் கொட்டி அடைத்துள்ளனர். இதனால் கழிவு நீர் வெளியேற வழியில்லாமல் அதே பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் குட்டை போல் தேங்கி நின்று வருகிறது.

    இதை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த மழை நீரும் அதே பகுதியில் தேங்கி, தற்போது கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளதால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் வெகு சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக அதே பகுதியில் உள்ள சில குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அடிக்கடி உடல் நலக்கேடு ஏற்படுவதாகவும், இதனால் டெங்கு காய்ச்சல் வரும் அபாயம் உள்ளதாகவும் அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும், சுகாதார அதிகாரிகளும் நேரில் வந்து பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    Next Story
    ×