search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.160 கோடி செலவில் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலங்களை எடப்பாடி பழனிசாமி திறந்தார்
    X

    ரூ.160 கோடி செலவில் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலங்களை எடப்பாடி பழனிசாமி திறந்தார்

    160 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 ரெயில்வே மேம்பாலங்கள் மற்றும் 7 ஆற்றுப்பாலங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். #TNCM #EdappadiKPalaniswami
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டம், முகலிவாக்கம்-சந்தோஷ் நகரின் ராமச்சந்திரன் தெருவில் 85 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட எண்ணூர்-சுனாமி குடியிருப்பு பாலகிருஷ்ணா நகர் (கண்ணாடி தொழிற்சாலை) ஆகிய இடங்களில் 84 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 பூங்காக்கள்;

    புழல்-வெஜிடேரியன் வில்லேஜ், கங்காதரன் தெரு, புத்தகரம்- சூரப்பட்டு, கதிர்வேடு- பத்மாவதி நகர் சர்வீஸ் சாலை-பிர்லா அவென்யூ அருகில், கதிர் வேடு-பத்மாவதி நகர் 7வது தெரு, பொன்னியம்மன் மேடு-தணிகாசலம் நகர், ஆகிய இடங்களில் 2 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 6 பூங்காக்கள்;

    முகப்பேர் திருமங்கலம் பிரதான சாலை, வி.ஜி.பி. நகர் வீரமாமுனிவர் தெரு ஆகிய இடங்களில் 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 3 பூங்காக்கள்;



    முகலிவாக்கம்-அன்னை வேளாங்கன்னி நகர் பேஸ்2, சோழிங்கநல்லூர்-ராஜீவ் காந்தி சாலை (டாலர் பில்டிங் அருகில்) ஆகிய இடங்களில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 பூங்காக்கள்;

    அம்பத்தூர் டி.வி.எஸ். காலனி 45-வது தெரு ஆபீசர்ஸ் காலனி ஆகிய இடங்களில் 51 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சிறுவர் விளையாட்டு மைதானங்கள்; பாடி புதுநகர் பிரதான சாலையில் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வார்டு அலுவலகக் கட்டடம் பாடி குப்பம் பிரதான சாலையில் 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வார்டு மற்றும் பகுதி அலுவலகக் கட்டடங்கள்;

    சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட சூரப்பட்டு பகுதியில் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட்டம்; புத்தகரம் மற்றும் கதிர்வேடு ஆகிய பகுதிகளில் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட்டம்; என மொத்தம் 103 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    போத்தனூரில் 22 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலத்தினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    புவனகிரி அருகே 22 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம்; நந்திமங்கலம்-பூலாமேடு கிராமங்களுக்கு இடையே 7 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம்;

    திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி எம்.எஸ்.பி கேம்ப் சாலை சந்திப்பில் 74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலத்தின் மதுரை மற்றும் பேருந்து நிலைய கிளைப் பகுதிகள்;

    தருமபுரி மாவட்டம், குமாரசாமிபேட்டையில் 22 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலம்; திருப்பூர் மாவட்டம், வாளவாடி-தெற்குபூதனம் சாலையில் பழையூரில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; ஈரோடு மாவட்டம், நாகர்பாளையம் சாலையில் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;

    தூத்துக்குடி மாவட்டம், புளியங்குடி- சங்கரன் கோவில்-கழுகுமலை- நாலாட்டின்புதூர் சாலை யில் குமாரபுரத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; பாளையங்கோட்டை- குறுக்குச்சாலை-குளத்தூர்- பந்தல்குடி- அருப்புக் கோட்டை சாலையில் கொ. தளவாய்புரத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை- பாவூர் சத்திரம் சாலையில் சுரண்டையில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;

    என மொத்தம், 160 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 ரெயில்வே மேம்பாலங்கள் மற்றும் 7 ஆற்றுப்பாலங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    ஆவடியில் 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், புதுக்கோட்டை மாவட்டம்- பொன்னமராவதியில் 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.  #TNCM #EdappadiKPalaniswami
    Next Story
    ×