search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரியில் மழை நீடிப்பு: கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு, தரை பாலம் மூழ்கியது
    X

    குமரியில் மழை நீடிப்பு: கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு, தரை பாலம் மூழ்கியது

    குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் நேற்று இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 37 மி.மீ. பதிவானது. மலையோர பகுதிகளில் பெய்து வரும் மழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் சானல்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோதையாற்றின் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    மோதிர மலை-குற்றியாறு சாலையில் உள்ள தரை பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அந்த பகுதி கிராமமக்கள் தவிப்பிற்கு ஆளானார்கள்.

    நாகர்கோவில், பூதப் பாண்டி, சுருளோடு, ஆரல்வாய்மொழி, புத்தன் அணை, அடையாமடை, குளச்சல், கொட்டாரம், மயிலாடி பகுதிகளிலும் நேற்றிரவு விட்டு விட்டு மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையினால் அங்கு குளு குளு சீசன் நிலவுகிறது. அருவியில் வெள்ளம் ஆர்ப் பரித்து கொட்டுகிறது. விடுமுறை தினமான இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராள மான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர்.அவர்கள் அருவியில் ஆனந்த குளிய லிட்டு மகிழ்ந்தனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-16, பெருஞ்சாணி-13.6, சிற்றாறு-1-10, சிற்றாறு-2-6.2, மாம்பழத்துறையாறு-23, நாகர்கோவில்-14.2, பூதப்பாண்டி-12.2, சுரு ளோடு-18.4, ஆணைக் கிடங்கு-17.2, குளச்சல்-9.6, குருந்தன்கோடு-7.6, அடையா மடை-31, கோழிப்போர் விளை-18, முள்ளங்கினா விளை-18, புத்தன் அணை- 14.2, திற்பரப்பு-18.2.

    Next Story
    ×