search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்துக்கு ரஜினிகாந்த் ஆதரவுக்குரல் - நேரம், செலவு மிச்சம் என கருத்து
    X

    ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்துக்கு ரஜினிகாந்த் ஆதரவுக்குரல் - நேரம், செலவு மிச்சம் என கருத்து

    சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டம் நேரம் மற்றும் செலவை மிச்சப்படுத்துவதால் ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார். #Rajinikanth
    சென்னை:

    ஈரோடு கனி ராவுத்தர் குளம் நந்தவனதோட்டம் பகுதியை சேர்ந்த முகமது யாசின் என்ற 8 வயது சிறுவன், பள்ளியின் அருகே ரோட்டில் 500 ரூபாய் பணம் கட்டு கிடந்ததைப் பார்த்து அதை எடுத்து ஆசிரியை வழியாக போலீசாரிடம் ஒப்படைத்தார். 

    ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த முகமது யாசின் நினைத்திருந்தால் அந்தப் பணத்தை எடுத்துச் சென்று குடும்பத்தினரிடம் கொடுத்து செலவு செய்திருக்கலாம். ஆனால், பெற்றோரால் நேர்மையாக வளர்க்கப்பட்ட முகமது யாசின் அந்தப் பணத்தை எடுத்து கொடுத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் கூறியது அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

    அனைவரின் பாராட்டுகளை பெற்ற யாசின், தனக்கு உதவிகள் எதுவும் வேண்டாம், ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக இந்த செய்தி ரஜினிகாந்தை எட்டியது. அவரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்தை யாசின் தனது குடும்பத்தோடு சந்தித்தார்.



    இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “யாசினின் செயல் பாராட்டுக்குரியது. அவரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. எதிர்க்காலத்தில் அவர் என்ன ஆக வேண்டும் என நினைக்கிறாரோ, அதற்கு உதவி செய்வேன். யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன்”என கூறினார். மேலும், சிறுவன் யாசினுக்கு அவர் தங்க சங்கிலி பரிசளித்துள்ளார்.

    சந்திப்புக்கு பின்னர் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாட்டின் வளர்ச்சிக்கு 8 வழி சாலைகள் அவசியம். விவசாயிகளுக்கு பாதிப்புகள் இல்லாமல் அதனை நிறைவேற்றினால் நலம். ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டம் நேரத்தையும், செலவையும் மிச்சப்படுத்துகிறது எனவே அதனை வரவேற்கலாம். 

    மற்ற மாநிலங்களை விட தமிழக கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது. தமிழருவி மணியன் என்னுடன் இணைந்து செயல்பட்டால் நான் வரவேற்பேன். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என ரஜினிகாந்த் கூறினார்.
    Next Story
    ×