search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
    X

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

    தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும் என்றும், சில மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை மற்றும் மிகக்கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து குளிர்வித்து வருகிறது. இன்றும் (சனிக்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை, நெல்லை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் கனமழை மற்றும் மிகக்கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

    தேவலா (நீலகிரி) 8 சென்டி மீட்டர், வால்பாறை (கோவை) 7 செ.மீ., சின்னக்கல்லார் (கோவை) 6 செ.மீ., பாபநாசம் (நெல்லை), பெரியாறு (தேனி) தலா 5 செ.மீ., பொள்ளாச்சி (கோவை) 4 செ.மீ., நடுவட்டம் (நீலகிரி) 3 செ.மீ., செங்கோட்டை, தென்காசி (நெல்லை), நாகர்கோவில் (கன்னியாகுமரி) ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் மேலும் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
    Next Story
    ×