search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருகிற 29-ந்தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை
    X

    வருகிற 29-ந்தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக வரும் 29ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் நேரில் சென்று ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது. #Jayalalithaa #ApolloHospital
    சென்னை:

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த ஆணையத்தில் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சசிகலாவுக்கு எதிராக ஆணையத்தில் பிரமாணப் பத்திரம், சாட்சியம் அளித்தவர்களிடமும் அவர் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வரும் 29ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது. ஜூலை 29ல் இரவு 7 மணி முதல் 45 நிமிடங்கள் நடைபெறும் இந்த விசாரணையின் போது ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறை, சிகிச்சை அளிக்கப்பட்ட விதம் குறித்து ஆய்வு செய்கிறது.


    மேலும் அமைச்சர்கள், அதிகாரிகள் இருந்த அறை உள்ளிட்டவை குறித்தும் விசாரிக்கிறது. முன்னதாக விசாரணை ஆணையம் கடந்த 15ஆம் தேதி ஆய்வு செய்ய இருந்த நிலையில் அப்பல்லோ மறுப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    வரும் 18ம் தேதி பத்திரிகையாளர் குருமூர்த்தி ஆஜராக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 20ல் மறுகுறுக்கு விசாரணைக்கு ஆஜராக பூங்குன்றன், சசிகலா உதவியாளர் கார்த்திகேயனுக்கும், மறுவிசாரணைக்கு ஆஜராக ராமலிங்கம் ஐ.ஏ.எஸ்-க்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #Jayalalithaa #ApolloHospital
    Next Story
    ×