search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
    X

    கொடைக்கானலில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

    கொடைக்கானலில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெருமாள்மலை:

    கொடைக்கானல் டோபிகானல் பகுதியில் 100 வருடம் பழமையான காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினசரி பூஜைகள் நடந்து வருகிறது. மேலும் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளிலும் முக்கிய திருவிழா நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த கோவிலின் பூட்டு இன்று காலை உடைந்து கிடந்ததைப்பார்த்து பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பணம், தங்க காசுகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

    மேலும் அதே பகுதியைச் சேர்ந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான வாகனங்களையும் திருடிச் சென்றனர். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களாக கொடைக்கானலில் சாரல் மழை பெய்தபடி இருந்ததால் இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது. இதனை பயன்படுத்தி கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டிச் சென்றது தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×