search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மாற்று நடவடிக்கை - நாராயணசாமி அறிவிப்பு
    X

    தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மாற்று நடவடிக்கை - நாராயணசாமி அறிவிப்பு

    நீட் தேர்வு வினாத்தாள் குளறுப்படி விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு எதிரொலியாக தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி உறுதியளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்றத்தில் பூஜ்யநேரத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் பேசியதாவது:-

    தமிழ் வழியில் படித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    புதுவையில் நீட் தேர்வு எழுதிய 4 ஆயிரத்து 500 மாணவர்களில் சுமார் ஆயிரத்து 700 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நம் மாநிலத்தில் தமிழ் வழியில் எழுதி நூற்றுக்கணக்கான மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளனர்.

    இந்த உண்மை நிலையை உணர்ந்துதான் நீதிமன்றம் 196 மதிப்பெண் அளித்து புதிய தர வரிசை பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் முதல் கவுன்சிலிங் முடிந்த நிலையில் இப்பிரச்சினையில் புதுவை அரசு என்ன செய்யப் போகிறது? தீர்ப்புக்கு முன் வெளியிட்ட தரவரிசை பட்டியலை ரத்து செய்து புதிய தரவரிசை பட்டியலை தயாரித்து அதன் அடிப்படையில் சென்டாக் மூலம் கவுன்சிலிங் நடத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆண்டுதோறும் சென்டாக்கில் நடைபெறும் குளறுபடிகளை தவிர்த்து நீதிமன்ற உத்தரவுப்படி மாணவர் சேர்க்கையை சரியாக நடத்த வேண்டும். இதற்காக சி.பி.எஸ்.இ.க்கு கடிதம் எழுதி புதிய தேர்வு, தர வரிசை பட்டியலை பெற வேண்டும். அதன்பின் 2-ம் கட்ட கவுன்சிலிங்கை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதிலளித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, இதுதொடர்பாக சென்டாக் அதிகாரிகளிடமும், வழிகாட்டும் மருத்துவ கவுன்சிலிடமும் பேசி மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
    Next Story
    ×