search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்திற்கு 33 புதிய பஸ்கள்- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
    X

    திருப்பூர் மாவட்டத்திற்கு 33 புதிய பஸ்கள்- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

    திருப்பூர் மாவட்டத்திற்கு 33 புதிய பஸ்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    திருப்பூர்:

    முதலமைச்சர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக 542 பஸ்களை இயக்கி வைத்தார். அதில் திருப்பூர் மாவட்டத்திற்கு 33 பஸ்களையும் இயக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நேற்று திருப்பூர் பழைய பஸ் நிலைய வளாகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருப்பூர் மண்டலத்தின் சார்பில், திருப்பூர் 1, திருப்பூர் 2, பல்லடம், காங்கயம், தாராபுரம், பழனி 1 மற்றும் பழனி 2 ஆகிய கிளைகளின் சார்பில் திருப்பூர் - ராமேஷ்வரம், திருச்சூர், சிவகாசி, திருச்சி, பரமக்குடி, பொள்ளாச்சி, பாலக்காடு, குருவாயூர் மற்றும் சேலம் ஆகிய 11 புறநகர் பஸ்ககளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன், இ.கா.ப., எம்.எல்.ஏ.,க்கள். குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), கரைப்புதூர் ஏ. நடராஜன் (பல்லடம்), முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக திருப்பூர் மண்டல பொது மேலாளர் கோவிந்தராஜ், துணை மேலாளர்கள் குணசேகரன் (வணிகம்), வேலுச்சாமி (தொழில்நுட்பம்), திருப்பூர் தெற்கு தாசில்தார் ரவிச்சந்திரன், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை கலெக்டர் பழனிசாமியுடன் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பூர் நகரின் மைய பகுதியான பழைய பஸ் நிலையம் அருகில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெருமாள் கோவில் அரிசி கடை வீதியில் இருந்து பல்லடம் சாலை பழைய கலெக்டர் அலுவலகம் வரை ரூ.43 கோடி மதிப்பீட்டில் 671.1 மீட்டர் நீளம் மற்றும் 12 மீட்டர் அகலத்துடன் 16 தூண்களுடன் பறக்கும் பாலம் கட்டப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இப்பாலப்பணிகள் முடிவுற்று தற்போது வடிகால் அமைக்கும் பணி மற்றும் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தும் விரைவில் முடித்து அடுத்த மாதம் (ஆகஸ்ட்) முதல் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இப்பாலம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வரும்போது மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×