search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சார்ஜாவில் இருந்து கோவைக்கு ரூ.1 கோடி தங்கம் கடத்தி வந்த கேரள வாலிபர் கைது
    X

    சார்ஜாவில் இருந்து கோவைக்கு ரூ.1 கோடி தங்கம் கடத்தி வந்த கேரள வாலிபர் கைது

    சார்ஜாவில் இருந்து கோவைக்கு ரூ.1 கோடி தங்கம் கடத்தி வந்த கேரள வாலிபரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    கோவை:

    சார்ஜாவில் இருந்து கோவைக்கு ஒரு விமானம் வந்தது. விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய ஊழியர்கள் சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அமல்ராஜ் (வயது 25) என்பவரது சூட்கேசை சோதனை செய்தனர். அதில், சிறிய ரக லேத் எந்திரத்திற்குள் தங்க கட்டிகள் இருப்பதாக ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். அதனை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் (டி.ஆர்.ஐ) ‘ஸ்கேன்’ செய்து பார்த்தபோது, உதிரிபாகத்துக்குள் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.

    மொத்தம் 3 கிலோ 675 கிராம் எடையுள்ள தங்கம் கட்டிகள் சிறிய பிஸ்கட்டுகளாக மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதன் மதிப்பு ரூ.1 கோடியே 15 லட்சம் ஆகும். இதைத்தொடர்ந்து சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அமல்ராஜை கைது செய்தனர். பின்னர் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகராஜன் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு அமல்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×