search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி பல்லால் கடித்து காரை இழுத்த பிளஸ்-1 மாணவர்
    X

    தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி பல்லால் கடித்து காரை இழுத்த பிளஸ்-1 மாணவர்

    தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி பல்லால் கடித்து காரை இழுத்த பிளஸ்-1 மாணவரை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி உள்ளார்.
    விழுப்புரம்:

    சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்கவும், தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தியும் விழுப்புரத்தில் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழுப்புரம் ரெயில்வே கேட் மாம்பழப்பட்டு சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு காரை பல்லால் கடித்து இழுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திருக்கோவிலூரில் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவர் திருமால் என்பவர் அந்த காரை பல்லால் கடித்து இழுத்து சென்றார்.

    இந்த நிகழ்ச்சியை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். காரை பல்லால் கடித்து இழுத்து சென்ற மாணவரை சாலையின் இருபுறமும் நின்று பார்த்த பொதுமக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். ஆனால், அந்த மாணவரால் சிறிது தூரமே அந்த காரை இழுக்க முடிந்தது.

    இதைத்தொடர்ந்து காரை பல்லால் கடித்து இழுத்த மாணவர் திருமாலை பாராட்டி போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சால்வை அணிவித்து, பரிசு வழங்கினார். இதில் சுரேஷ்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×