search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை ஆணைய விவகாரம்: பாராளுமன்றத்தில் மீண்டும் விவாதிக்க கூடாது- மு.க.ஸ்டாலின்
    X

    காவிரி மேலாண்மை ஆணைய விவகாரம்: பாராளுமன்றத்தில் மீண்டும் விவாதிக்க கூடாது- மு.க.ஸ்டாலின்

    காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் விவாதிக்க கூடாது என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். #MKStalin #DMK
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- கர்நாடக அரசு காவிரி நதிநீர் பிரச்சினைக்காக அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டியிருக்கிறதே?

    பதில்:- அதிகமான அளவிற்கு பவர் இல்லாத ஒரு ஆணையத்தை உச்சநீதிமன்றத்தின் மூலமாக அமைத்திருந்தாலும் அதுவும் தவறு என்று சொல்லி வாதாடுகிற கர்நாடக மாநிலத்தினுடைய முதல்-அமைச்சர், அங்கிருக்கக்கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி இதுபற்றி பாராளுமன்றத்திலே விவாதிக்க வேண்டும். பேசிட வேண்டும் என்று குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறார். இதற்கு மத்திய அரசு அடிபணிந்து விடக்கூடாது, இதுபற்றி பாராளுமன்றத்தில் எந்த காரணத்தைக் கொண்டும் விவாதிக்க வேண்டிய அவசியமே கிடையாது.

    காலத்தைக் கடத்துவதற்காக கர்நாடக மாநிலம் இன்றைக்கு ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. எனவே, உடனடியாக தமிழகத்தினுடைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இதற்கு ஒரு நல்ல முடிவை எடுத்து மத்திய அரசுக்கு ஒரு அழுத்தத்தை நாம் தரவேண்டும் என்று நான் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருக்கிறேன்.

    அது தொடர்பாக எங்கள் கட்சியினுடைய எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் சட்டசபையில் பேசியிருக்கிறார். அதற்கு பதிலளித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி ஆணையத்தினுடைய கூட்டம் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. எனவே, இந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்று பொறுத்திருந்து கூட்டத்தைக் கூட்டலாம் என்று ஒரு பதிலை தந்திருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.

    கேள்வி:- சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு மக்களாக விரும்பித்தான் தங்களுடைய இடங்களை அளிக்கிறார்கள் என்று முதல்-அமைச்சர் தெரிவித்திருக்கிறாரே?

    பதில்:- இவருடைய வார்த்தையை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை, மக்கள் அவதிக்கு ஆளாகி எங்கே போராடிக் கொண்டிருக்கிறார்களோ? அந்த விவசாயப் பெருங்குடி மக்களை, பொதுமக்களை சந்தித்து இந்த வார்த்தையை சொன்னார் என்றால் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

    கேள்வி:- சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் என்பது மத்திய அரசின் திட்டம் தான், மாநில அரசின் திட்டம் அல்ல, மற்றக் கட்சிகள்தான் இதை பெரியதாக்கி மக்களை திசை திருப்புவதாக வரும் கருத்துக்கு உங்கள் பதில்?

    பதில்:- மத்திய அரசு என்னதான் திட்டம் கொண்டு வந்தாலும், அதற்குரிய ஒப்புதலை அதற்குரிய ஆதரவை, பணியை நிறைவேற்றுவது மாநில அரசினுடைய கடமை. அதனால் தான் மாநில அரசு அடிமையாக இல்லாமல் மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் அதற்குரிய வகையிலே, உரிய முறையிலே குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #DMK
    Next Story
    ×