search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு
    X

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு

    வரத்து குறைந்ததால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காய விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது.
    ஒட்டன்சத்திரம்:

    தென் தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களான அத்திக் கோம்பை, அம்பிளிக்கை, சத்திரப்பட்டி, விருப்பாச்சி, புதுசத்திரம், லக்கையன்கோட்டை மற்றும் கீரனூர், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் பொருட்களை இங்கு கொண்டு வருகின்றனர்.

    இங்கிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் கேரளாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த மாதம் சின்னவெங்காயம் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது. தற்போது சுற்றுவட்டார பகுதிகளில் வெங்காயம் விளைச்சல் இல்லை. எனவே குறைந்த அளவே ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வரத்து உள்ளது.

    இதனால் நாட்டு சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.55 வரை விலை போகிறது. மைசூரில் இருந்து 10 டன் சின்ன வெங்காயம் இறங்கி உள்ளது.

    ஆனால் இந்த வெங்காயம் இருப்பு வைக்க முடியாது என்பதால் இதனை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நாட்டு வெங்காயம் வாங்குவதற்கு வியாபாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    இதேபோல் முருங்கை விலையும் உயர்ந்து ரூ.50-க்கு விற்பனையானது. வரும் காலங்களில் காய்கறிகளின் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    காய்கறிகள் ஒரு கிலோவிற்கு பல்லாரி வெங்காயம் ரூ.17, பூசணிக்காய் ரூ.10, மிளகாய் ரூ.30, முட்டைகோஸ், கேரட் ரூ.20, இஞ்சி ரூ.60, கத்தரிக்காய் (20 கிலோ) ரூ.600-ல் இருந்து 700, புதினா ஒரு கட்டு ரூ.50, மல்லி ரூ.80, தக்காளி 14 கிலோ பெட்டி ரூ.180 என்ற விலையில் விற்பனையானது.

    Next Story
    ×