search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லாரிகள் வரத்து அதிகரிப்பு
    X

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லாரிகள் வரத்து அதிகரிப்பு

    பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க கோரி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிகளவு காய்கறி லாரிகள் வந்தது.

    சென்னை, ஜூன். 21-

    டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்வதை நிறுத்த வேண்டும். டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18-ந்தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 4-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.

    இப்போராட்டத்தில் சில சங்கங்கள் பங்கேற்கவில்லை. இதனால் நாடு முழுவதும் சரக்கு லாரிகளில் 40 சதவீதம் தான் ஓடவில்லை.

    தமிழகத்தில் 3 லட்சம் லாரிகள் இயங்கவில்லை. பாதி அளவு லாரிகள் ஓடு வதால் பெரிய பாதிப்பு இதுவரை ஏற்படவில்லை.

    இந்த நிலையில் பால் மற்றும் தண்ணீர் லாரிகளின் உரிமையாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டு இருக் கிறார்கள்.

    இதனால் பால், தண்ணீர் சப்ளையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது. லாரிவேலை நிறுத்தத்தால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகள் வரத்தில் பாதிப்பு இருக்கிறது. நாசிக்கில் இருந்து வெங்காயம், உருளைக் கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் வரவில்லை.

    கோயம்பேடு மார்க்கெட் டுக்கு வழக்கமாக 350 லாரிகள் வருவது உண்டு. கடந்த 3 நாட்களாக லாரி கள் குறைவாக வந்ததால் காய்கறிகள் வரத்து குறை வாக இருந்தது. இதனால் 20 சதவீதம் விலை உயர்ந்தது.

    ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியது. இன்று லாரிகள் அதிகளவு வந்தது. இதனால் காய்கறிகள் விலை குறைந்தது. 250 லாரிகளில் காய்கறிகள் வந்து இறங்கியது.

    ஆனால் காய்கறிகளை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிகளவு வராததால் வியாபாரம் மந்தமாக இருந்தது. இதனால் கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ.35, ரூ.45-க்கு விற்ற கேரட் ரூ30, ரூ.80-க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் ரூ.30 ஆகவும் ரூ.90-க்கு விற்கப்பட்ட இஞ்சி ரூ.60 ஆகவும் குறைந்தது.

    பொதுவாக லாரி ஸ்டிரைக் காலங்களில் காய்கறிகள் விலை பல மடங்கு உயருவது வழக்கம். ஆனால் இப்போது லாரிகள் அதிகளவு வந்ததால் காய்கறிகள் தேங்கியுள்ளன. வியாபாரமும் மந்தமாக இருப்பதால் விலை குறைக் கப்பட்டன என்று மொத்த வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×