search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அய்யலூர் அருகே இரவு முழுவதும் தடையின்றி நடக்கும் மணல் திருட்டு
    X

    அய்யலூர் அருகே இரவு முழுவதும் தடையின்றி நடக்கும் மணல் திருட்டு

    அய்யலூர் அருகே பல கிராமங்களில் இரவு முழுவதும் தடையின்றி மணல் திருட்டு நடந்து வருகிறது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள கிணத்துப்பட்டி, பாலாதோட்டம், பொன்னையம்பட்டி ஆகிய பகுதிகளில் சமீப காலமாக அதிக அளவு மண் திருட்டு நடந்து வருகிறது.

    பகல் நேரங்களில் மணலை அள்ளி குவித்து வைத்து விட்டு இரவு நேரங்களில் அதிக அளவு லாரிகளில் இதனை உள்ளூர் வியாபாரிகளுக்கும் வெளியூருக்கும் விற்பனை செய்கின்றனர்.

    இரவு முழுவதும் லாரிகள் சென்றபடி இருப்பதால் கிராம மக்கள் பீதியில் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.

    மணல் கடத்தும் கும்பல் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கவும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சமீப காலமாக பெய்து வரும் மழையை பயன்படுத்தி கிராமங்களில் தற்போதுதான் விவசாய பணிகள் ஓரளவு நடந்து வருகிறது. ஆனால் தொடர் மணல் திருட்டால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதுடன் கனிம வளக்கொள்ளையும் தடையின்றி நடப்பதற்கு வழி ஏற்பட்டுள்ளது.

    எனவே அதிகாரிகள் இதனை தடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×