search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு விலை உயர்வு
    X

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு விலை உயர்வு

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு உருளைக்கிழங்கு வரத்து குறைந்து காணப்பட்டதால் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. 45 கிலோ உருளைக்கிழங்கு ரூ.1400 மற்றும் ரூ. 2100 வரை விற்பனை ஆனது.
    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்ட விவசாய விளை பொருள்களின் முக்கிய வியாபார கேந்திரமாக மேட்டுப்பாளையம் நகரம் விளங்கி வருகின்றது .

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன .நேற்று (19-ந் தேதி) மார்க்கெட்டுக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து உருளைக்கிழங்கு 7 லோடும், குஜராத்தில் குளிர்பதனக் கிடங்கில் இருந்து கொண்டு வரப்பட்ட கோலார் உருளைக்கிழங்கு 5 லோடும் வந்திருந்தது.

    நீலகிரி மாவட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு உருளைக்கிழங்கு வரத்து குறைந்து காணப்பட்டதால் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. 45 கிலோ உருளைக்கிழங்கு ரூ.1400 மற்றும் ரூ. 2100 வரை விற்பனை ஆனது. அதே போல் குஜராத் உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ.850-ல் இருந்து ரூ.1000 வரையும், கோலார் உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ.1200 வரையும் விற்பனை ஆனது .உற்பத்தி குறைவு காரணமாக மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு வரத்து குறைந்து விலை அதிகரித்து காணப்படுகின்றது .

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவிற்கு தினசரி உருளைக் கிழங்குகள் அனுப்பி வைக்கப்படுகின்றன .


    Next Story
    ×