search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி விளையாட்டு போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது
    X

    பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி விளையாட்டு போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது

    விளையாட்டின் சிறப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் 3 நாட்கள் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக கிராமங்களில் உள்ள அனைத்து இளைஞர்களிடையே விளையாட்டின் சிறப்புகளை பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி அவர்களுக்கு உரிய பயிற்சியும் ஊக்கமும் அளித்து, அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளிலும் பங்கு பெறும் வண்ணம் தமிழக வீரர்கள் உருவாக்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு தமிழகத்திலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளிலும் விளையாட்டினை மேம்படுத்திட கிராம ஊராட்சி விளையாட்டு போட்டிகள் நான்காம் ஆண்டாக நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி 2016-2017ம் ஆண்டிற்கான கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள் 28.6.2018 முதல் 30.6.2018 வரை பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள கிராம ஊராட்சி பள்ளிகள் - சமுதாய கூடத்தில் நடைபெற உள்ளது.

    முதல் நாள் குழுப்போட்டிகளில் கலந்து கொள்ளும் அணிகள்- தனித்திறன் போட்டிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் பெயர் மற்றும் இருப்பிட விவரங்கள் கிராம ஊராட்சியில் கிராம ஊராட்சி செயலரிடம் பதிவு செய்ய வேண்டும். இரண்டாம் நாள் அனைத்து குழுப்போட்டிகளும் நடத்தப்படும். மூன்றாம் நாள் தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிப் பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும்,

    இவ்விளையாட்டு போட்டிகள் ஆண், பெண், இருபாலருக்கும் தனித்தனியே நடத்தப்பட உள்ளது. தடகளப் போட்டிகள் (ஆண்,பெண் இருபாலருக்கும்) 100மீ, 200மீ, 400மீ நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது. குழுப்போட்டிகள் பிரிவில் கையுந்துப்பந்து, கபாடி ஆகிய விளையாடடுகளில் ஆண் பெண் இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது. கால்பந்து விளையாட்டு ஆண்களுக்கு மட்டும் நடத்தப்பட உள்ளது. தனித் திறன் மற்றும் குழுப் போட்டிகளில் மூன்று இடத்தினைப் பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்படும்.

    மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் அவர்களுக்கென தேர்வு செய்யப்பட்ட இரண்டு விளையாட்டில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு கிராம ஊராட்சி விளையாட்டுகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்கள் பதக்கங்களாக வழங்கப்பட உள்ளது. எனவே கிராம ஊராட்சியில் அமைந்துள்ள சுய உதவிக்குழுக்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பள்ளிகள்- கல்லூரிகளில் பயிலும் வீரர்கள் -வீராங்கனைகள் உள்ளடக்கிய அனைவரும் அவரவர் கிராம ஊராட்சிகளில் இப்போட்டிகளில முழுமையாக பங்கேற்று பயனடையலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×