search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் பனியன் தொழிலாளி முகத்தை சிதைத்து கொலை
    X

    திருப்பூரில் பனியன் தொழிலாளி முகத்தை சிதைத்து கொலை

    திருப்பூர் பனியன் தொழிலாளி கொலையில் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் வீரபாண்டியை அடுத்த வித்யாலயம் ஆத்தாள் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (48) பனியன் தெழிலாளி. கடந்த 25 ஆண்டுகளாக ஒரே பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி ஜெயப்பிரியா (35).இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

    இதனால் ஜெயப்பிரியா கோவை வடவள்ளியில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் மகப்பேறு ஆஸ்பத்திரியில் ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று வந்தார்.

    சரவணன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர் நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சரவணன் குளியலறையில் பிணமாக கிடந்தார்.

    அவரது தலையில் ஹலோபிளாக் கல்லால் தாக்கப்பட்டு இருந்தது. மேலும் முகமும் அதே கல்லால் சிதைக்கப்பட்டு இருந்தது. சரவணனை யாரோ மர்ம நபர்கள் கொலை செய்து முன் பக்க கதவை உள்புறம் பூட்டி விட்டு பின்பக்கமாக சென்றது தெரியவந்தது.

    சரவணன் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதைனைக்காக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சரவணன் தினமும் காலை 9 மணிக்கும் இரவு 9 மணிக்கும் தனது மனைவி ஜெயப்பிரியாவிடம் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சம்பவத்தன்று இரவு 9 மணிக்கு பேசி உள்ளார். பின்னர் காலை பேசுவதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். மறுநாள் காலை பேசவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயப்பிரியா கணவர் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட் ஆப் என வந்துள்ளது.

    இதனை தொடர்ந்து ஜெயப்பிரியா தனது கணவரின் தம்பி முருகராஜராகவனை செல்போனில் தொடர்பு கொண்டு இது குறித்து நேரில் சென்று பார்க்குமாறு கூறி உள்ளார்.

    ஆனால் அவர் வெளியில் இருந்ததால் உடனடியாக செல்ல முடியவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் சரவணன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலில் பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டுள்ளனர்.

    சரவணன் குறித்து அவர் வேலை பார்த்த பனியன் கம்பெனியில் விசாரித்த போது அவருக்கு யாருடனும் முன் பகை எதுவும் கிடையாது. அனைவரிடமும் சகஜமாக பழகுவார். கடந்த 25 ஆண்டுகளாக தங்கள் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    சரவணன் வீடு இருக்கும் பகுதியில் வெளியாட்கள் எளிதில் நுழைய முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் எப்படி கொலை செய்யப்பட்டார். தெரிந்த நபர்கள் தான் கொன்று இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக சரவணன் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சரவணன் தம்பி முருகராஜராகவனிடம் ஜெயப்பிரியா தகவல் தெரிவித்தும் அவர் ஏன் உடனடியாக செல்லவில்லை. அவர் வெளியூரில் இருந்தாரா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×