search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலை நிறுத்த போராட்டம்- திண்டுக்கல் மாவட்ட லாரி உரிமையாளர்கள் புறக்கணிப்பு
    X

    வேலை நிறுத்த போராட்டம்- திண்டுக்கல் மாவட்ட லாரி உரிமையாளர்கள் புறக்கணிப்பு

    வேலை நிறுத்த போராட்டத்தில் திண்டுக்கல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் கலந்து கொள்ளாததால் வழக்கம்போல் லாரிகள் இயங்கின. #LorryStrike
    திண்டுக்கல்:

    பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே தினசரி மாறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும், சுங்க கட்டணம் மற்றும் 3-ம் நபர் விபத்து காப்பீடு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரசின் கீழ் செயல்படும் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் லாரிகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் லாரிகள் வழக்கம்போல் இயங்கியது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி எல்லப்பன் தெரிவிக்கையில், 2 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசிடம் எங்கள் கோரிக்கை வைக்கப்பட்டது.

    தற்போது கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு, பண்டிகை காரணமாக லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் எங்கள் கூட்டமைப்பினர் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுமார் 3500-க்கும் மேற்பட்ட லாரிகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

    இதேபோல ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிலும் லாரிகள் வேலை நிறுத்தம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு தினசரி 100-க்கும் அதிகமான லாரி களில் இருந்து காய்கறிகள் வெளிமாவட்டங்களுக்கும், கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த லாரிகள் அனைத்தும் இன்று வழக்கம்போல் இயக்கப்பட்டன. #LorryStrike
    Next Story
    ×