search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலாயுதம்பாளையம் அருகே ஆட்டோவில் மணல் கடத்திய டிரைவர் கைது
    X

    வேலாயுதம்பாளையம் அருகே ஆட்டோவில் மணல் கடத்திய டிரைவர் கைது

    வேலாயுதம்பாளையம் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சரக்கு ஆட்டோவில் மணல் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து 45 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம், என். புதூர், கிழக்கு தவுட்டுப்பாளையம், நெய்யல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி ஆற்றில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டி, டிராக்டர், லாரி, மற்றும் தவுட்டுபாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டைகளில்  திருட்டு தனமாக மணல் அள்ளி வருவதாக கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராசுவிற்கு  புகார் மனு சென்றது. அதன் அடிப்படையில் நேற்று 15-ந் தேதி  வேலாயுதம் பாளையம் போலீஸ்இன்ஸ் பெக்டர் குருநாதன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஆறு முகம் மற்றும்  போலீசார் வேலாயுதம்பாளையம் -கொடுமுடி நெடுஞ்சாலையில் சேமங்கி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது சேமங்கி காவிரி ஆற்றுப் படுகையில் சென்று பார்த்த போது ஒரு சரக்கு ஆட்டோவில் சுமார் 45 மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.சம்பவ இடத்திற்கு சென்றபோது சரக்கு ஆட்டோ டிரைவர் சேமங்கி மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த ஜெகதீசன்(41) என்பவர் சரக்கு ஆட்டோவை விட்டு விட்டு தப்பி ஓட முயன்றார். போலீசார் சுற்றி வளைத்து ஜெகதீசனை கைது செய்து சரக்கு ஆட்டோவை  பறிமுதல் செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×