search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகாடு மலைப்பகுதி கிராமத்திற்குள் உலாவரும் சிறுத்தைப்புலி
    X

    வடகாடு மலைப்பகுதி கிராமத்திற்குள் உலாவரும் சிறுத்தைப்புலி

    வடகாடு மலைப்பகுதி கிராமத்திற்குள் உலாவரும் சிறுத்தைப்புலி காரணமாக பொது மக்கள் பீதியில் உள்ளனர்.

    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் வனப்பகுதி 10 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பளவுடையது. இந்த வனப்பகுதியில் காட்டு யாணைகள், காட்டெருமைகள், கடமான்கள், சிறுத்தைப்புலிகள், செந்நாய்கள், முயல், சாம்பல்நிற அணில்கள், உடும்புகள், கீரிகள், மலைப்பாம்புகள், பச்சோந்தி உள்பட பல்வேறு காட்டு விலங்குகள் வசித்து வருகின்றன.

    கடந்த சில நாட்களாக வடகாடு மலைப்பகுதியைச் சேர்ந்த பால்கடை மலை கிராமத்தில் சிறுத்தைப் புலிகள் நடமாட்டம் காணப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 நிறைமாத கர்ப்பிணிகள் ஒரு குழந்தையுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும்பொழுது பாறை மீது படுத்திருந்த சிறுத்தைப்புலி இவர்களை கண்டவுடன் தலையை தூக்கி கோபத்துடன் எழுந்ததாகவும், சிறுத்தையை கண்ட மூவரும் வேகவேகமாக வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் கூறுகின்றனர்.

    இதே போல் பரப்பலாறு அணைப்பகுதியில் கருஞ் சிறுத்தை காணப்படுவதாகவும், சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.

    ஊருக்குள் நடமாடும் சிறுத்தைப்புலி காரணமாக பொது மக்கள் பீதியில் உள்ளனர். எனவே உயிர்பலி ஏற்படும் முன் சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்கு கொண்டு சென்று விடுமாறு வனத்துறையினருக்கு அனைத்து தரப்பு பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews

    Next Story
    ×