search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி சாலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு
    X

    நீலகிரி சாலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு

    நீலகிரி சாலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் தெரிவித்தனர். #OotyAccident #NilgiriBusAccident
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மந்தாடா கிராமம் அருகே சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது. அபாயகரமான வளைவுகள் கொண்ட அந்த சாலையில் இருந்து சுமார் 200 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்ததால் பேருந்தின் ஒரு பகுதி முற்றிலும் நொறுங்கியது. 

    இதனால் இடிபாடுகளில் சிக்கிய பலர் ரத்த வெள்ளத்தில் மயங்கினர். சிலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில், துடித்தனர். 

    தகவலறிந்த போலீசாரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் முதல் கட்டமாக 7 பேர் உயிரிழந்தனர் எனவும், 27 பேர் காயமடைந்தனர் எனவும், அதில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், நீலகிரி சாலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் பயணி ஒருவரும், பேருந்து நடத்துனரும் இன்று இறந்தனர். இதையடுத்து, நீலகிரி சாலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் தெரிவித்தனர். #OotyAccident #NilgiriBusAccident #tamilnews
    Next Story
    ×