search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிபா வைரஸ் பீதியால் ஊத்துக்கோட்டையில் மாம்பழம் வாங்க வியாபாரிகள் அச்சம்
    X

    நிபா வைரஸ் பீதியால் ஊத்துக்கோட்டையில் மாம்பழம் வாங்க வியாபாரிகள் அச்சம்

    நிபா வைரஸ் பீதியால் ஊத்துக்கோட்டை மாம்பழ மார்க்கெட்டு வியாபாரம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. மாம்பழம் வாங்க வியாபாரிகள் தயங்குகின்றனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னேரி, நரசாரெட்டி கண்டிகை, புதுகுப்பம், ஆம்பாக்கம், பேரடம், மதனம்பேடு, என்.எம். கண்டிகை, தாராட்சி, நெல்வாய், பாலவாக்கம், கரடிபுத்தூர், செங்கரை, தேர்வாயகண்டிகை, கண்ணன்கோட்டை.

    பூண்டி, சீதஞ்சேரி, அம்மம் பாக்கம், காரணி, சுப்பாநாயுடு கண்டிகை, நந்தனம், கொடியமேபேடு, படயகொடியமேபேடு, வெள்ளாத்துக்கோட்டை, நம்பாக்கம், அரியத்தூர், சென்றான்பாளையம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மாந்தோட்டங்கள் உள்ளன.

    இங்கு பங்கினபள்ளி, ருமானி, ஜவாரி, சில்பசந்த், மல்கோவா, ஹாபிஸ், செந்துரை பழரகங்கள் பயிரிடப்படுகின்றன. இந்த மாம்பழங்களுக்கு கடும் கிராக்கி உண்டு.

    தஷ்போது சீசனையொட்டி ஊத்துக்கோட்டை மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக அதிக அளவில் மாம்பழங்கள் வந்து குவிந்து வருகின்றன.

    இங்கு திருவள்ளூர், பூந்தமல்லி, போரூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், தாம்பரம், சென்னை போன்ற வெகு தூரத்தில் இருந்து வரும் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் மாம்பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நிபா வைரஸ் பழங்களால் பரவுகிறது என்ற பீதியால் பெரும்பாலான பொதுமக்கள் மாம்பழங்களை சாப்பிட தயங்குகின்றனர்.

    இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஊத்துக்கோட்டை மாம்பழ மார்க்கெட்டு தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் விலையும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது

    பங்கனபல்லி கிலோ ரூ. 20-க்கு விற்கப்படுறது. அதேபோல் ஜவாரி கிலோ ரூ. 25, ருமானி ரூ. 8, செந்துரை ரூ. 8, நாட்டு ரகம் வெறும் ரூ. 5-க்கு விற்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு பங்கனபல்லி ரூ. 40, ஜவாரி ரூ. 50, ருமானி ரூ. 25, செந்துரா ரூ. 30 நாட்டு ரகம் ரூ.20 விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    நிபா வைரஸ் பீதி காரணமாக பொது மக்களிடத்தில் மாம்பழம் வாங்கும் ஆர்வம் குறைந்துள்ளதாக புதுகுப்பத்தை சேர்ந்த மாரி என்ற வியாபாரி தெரிவித்தார்.

    வியாபாரம் இல்லாததால் ஊத்துக்கோட்டை மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வந்த மாம்பழங்கள் அழுகி வருகின்றன. விவசாயிகள் லாரி மற்றும் டிராக்டர்களில் கொண்டு சென்று கொட்டி அழித்து வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×