search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாடானையில் நூதன முறையில் மணல் திருட்டு
    X

    திருவாடானையில் நூதன முறையில் மணல் திருட்டு

    திருவாடானை பகுதியில் நூதனமான முறையில் அடிக்கடி மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் நூதன முறையில் டிராக்டரில் ஆற்றுமணல் திருடிவருகிறார்கள். அதற்கு திருவாடானை தாசில்தாரிடம் சவடு மண் அள்ளுவதற்கென்று ஏதாவது ஒரு சர்வே எண்ணை குறிப்பிட்டு அனுமதி பெறுகின்றனர்.

    பின்னர் அந்த அனுமதியை வைத்துக் கொண்டு அருகில் உள்ள ஆற்று பகுதிகளில் மணல் திருட்டில் ஈடுபடுகிறார்கள். அப்படி அனுமதி வைத்துக் கொண்டு சவடு மண் அள்ளும்போது வருவாய்த் துறை அதிகாரிகள் உடன் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த விதிகளை கடைபிடிப்பதில்லை. மேலும் இரவு நேரங்களில் சவடு மண்ணாக இருந்தாலும் அள்ளக் கூடாது.

    இந்தநிலையில் திருவாடானை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கணேசன் ரோந்து சென்ற போது அடுத்தகுடி பஸ் நிறுத்தம் அருகே எதிரே வந்த டிராக்டரை மறித்து சோதனை செய்தார். அப்போது ஆற்று மணல் இருந்துள்ளது. அதுபற்றி விசாரித்தபோது அதற்கு சவடு மண் அள்ள அனுமதியை டிராக்டர் டிரைவரான நகரிகாத் தான் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (46) காண்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து உரிய அனுமதியின்றி ஆற்று மணல் திருடிய கண்ணனை போலீசார் கைது செய்தனர்.

    டிராக்டரையும் பறிமுதல் செய்து திருவாடனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகி றார்கள்.

    Next Story
    ×